2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அப்போதைய ஜனாதிபதிக்கு ஏன் ஆலோசனை வழங்கவில்லை?

Simrith   / 2024 மார்ச் 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச, இரசாயன விவசாயத்தை தடை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, தான் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒரு தலைவர் இறுதிப் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.

"எனக்கு தெரியாது. ஒரு தலைவர் முடிவெடுப்பதற்கு மற்றவர்களைக் கலந்தாலோசிக்கலாம். ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், அவர் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில் பசில் ராஜபக்ச கூறினார்.

அரசாங்கத்தின் பொறுப்பான உறுப்பினர் என்ற வகையில், தனது மூத்த சகோதரரான அப்போதைய ஜனாதிபதிக்கு அவர் ஏன் ஆலோசனை வழங்கவில்லை என்று கேட்டதற்கு, ”நான் ஆலோசனை வழங்க முடியும், ஆனால் எந்தவொரு தலைவரும் இறுதியாக பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார்.

“நான் ஒருமுறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, ​​பாம் எண்ணெய் பயிர்ச்செய்கை பற்றிப் பேசினோம். அந்த நேரத்தில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. உக்ரைன் இந்தியாவிற்கு மரக்கறி எண்ணெய்  முக்கிய வழங்குனர்.

பாம் ஒயில் பயிரிடும் உலகின் மூன்று சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதாக மோடி என்னிடம் கூறினார். அவர் 35 ஆண்டுகளாக திரும்ப வாங்கும் ஒப்பந்தத்தின் கீழ் பாமாயில் பயிரிட முயன்றார்.

சுற்றாடல் காரணங்களுக்காக இலங்கை இவ்வாறான பயிர்ச்செய்கையை நிறுத்தியதாக நான் பணிவுடன் மறுத்தேன்.  மோடி அதை எதிர்க்கவில்லை. மாறாக சூரியகாந்தி பயிர்ச்செய்கை என்று தலைப்பை மாற்றினார்.

முடிவெடுப்பதற்கு முன், நான் தலைமைக்கு ஆலோசனை கூற முடியும். அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டால், அதற்கு முழுப் பொறுப்பையும் தலைவர் ஏற்க வேண்டும்,'' என பசில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X