2024 ஜூன் 17, திங்கட்கிழமை

அமெரிக்கரிடம் இருந்து ரூ.1.45 மில்லியன் பணம் திருட்டு

Simrith   / 2024 மே 26 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கமவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1.45 மில்லியன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் திருடப்பட்டமை தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த அமெரிக்க பிரஜையான ஆன்ட்ரூ கிறிஸ்டோபர் லூகாஸ் என்பவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சுற்றுலாப் பயணி மே 23 அன்று ஹோட்டலுக்கு வந்துள்ளார், மேலும் 24 ஆம் திகதி அதிகாலை 4:20 மணியளவில், அவர் தனது அறையின் திறந்த திரை வழியாக யாரோ வருவதைக் கண்டு எழுந்தார். அப்போது தான் உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர், லூகாஸ் விடுதி ஊழியர்களுக்கு அறிவித்து முழுமையான சோதனையை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது பையில் இருந்த 4,000 அமெரிக்க டொலர்கள், 210,000 இலங்கை ரூபாய்கள், அவரது கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை காணாமல் போயிருந்ததாக.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X