2024 மே 08, புதன்கிழமை

அமெரிக்க அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 27 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்துள்ளார் என  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X