2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்த இருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தொகை அமெரிக்க டொலர்களை சிங்கப்பூருக்கு கடத்த முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால், நேற்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொடை, பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த, 31, 35 வயதானவர்களெனவும் சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று பகல் சிங்கப்பூர் நோக்கிய பயணமாகவிருந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, ஈ.கே. 348 என்ற விமானத்தில் செல்வதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 36,11 140 ரூபாய் பெறுமதியான 21,242 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவின் பிரதி சுங்கப்பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய முன்னெடுத்ததுடன், சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்களை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X