2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அமைச்சரவை திருத்தம் இந்த வாரத்தில்’

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரத்தில் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 30​ஐ விட அதிகரிக்க முடியுமா என்பது குறித்து சட்டமா அதிபரின் கருத்துக்களைக் கோரியுள்ளதாகவும், சட்டமா அதிபரின் கருத்துக்கள் கிடைத்தவுடன் அமைச்சரவையில் திருத்தங்கள் செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சரவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .