2025 ஜூலை 16, புதன்கிழமை

அமைச்சரவைக் கூட்டத்தில் பூஜித்துக்கு ஜனாதிபதி வசைமாரி?

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது, அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் விமர்சனங்களுக்கு மத்தியில், நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அவர் மீதான கடுமையான விமர்சனங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தாரெனத் தெரிவிக்கிறது.

அத்தோடு, பொலிஸ்மா அதிபரின் நடத்தை, அவரது பதவிக்குப் பொருத்தமற்றதாக மாறி வருகிறது என ஜனாதிபதி கூறினாரெனவும், இப்பத்திரிகையால் அறிய முடிகிறது.

நாட்டில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இவ்விடயத்தை, உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவே, இவ்விடயம் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, தரவுகளின் அடிப்படையில், குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்று பதிலளித்துள்ளதோடு, ஊடகங்களால் தான் வேறு விதமாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யார் என்ன கூறினாலும், பொலிஸ் சேவையின் தரம் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டதோடு, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொலிஸ் சேவையும், சீர்திருத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

தானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பொலிஸ்மா அதிபரின் நடத்தைகளால், பொதுமக்களிடத்தில் கெட்ட பெயரைப் பெறுவதாக, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .