2025 ஜூலை 05, சனிக்கிழமை

அமைச்சரவைக் கூட்டம் நாளை

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரத்துக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நடைபெறவுள்ளதாகத் அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதால், நாளைய தினம் அமைச்சரவை கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று இரவு அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  அமைச்சர்களுடனான விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகவும், இதன்போது நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய யோசனைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .