2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அமைச்சர்கள் கடமைகளை செய்வதில் சிக்கல்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அசாங்கத்தின் அமைச்சுகளின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாத காரணத்தால் அமைச்சுக்களின் கடமைகளை  அமைச்சர்கள் முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள், பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலானது இதுவரை வெளியிடப்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுக்களின் விடயதானங்கள், கடமைகள், அமைச்சுக்களின் கீழான நிறுவனங்கள் தொடர்பான யோசனைகள் உள்ளடக்கப்பட்டு, பிரதமரின் செயலாளரால் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியம் என்பதுடன் ஜனாதிபதி தற்போது தாய்லாந்துக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ளமையால் வர்த்தமானி வெளியிடுதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .