Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 05 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு, தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை நியமிக்கும்போது, ஜனாதிபதியின் செயலாளர்களால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனைத்து அமைச்சுகளில் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன், 2018.12.31ஆம் திகதி PS/PCMD/19/2018 இலக்கமுடைய, மேற்குறிப்பிட்ட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழுக்களை நியமிக்கும்போது, தகைமைகளை பரிசீலித்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கும் அண்மையில் ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தலைமை வகிக்கும் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் டப்.ஜே.எஸ். கருணாரத்ன மற்றும் பிரதமரால் நியமிக்கப்பட்ட இரு பிரதிநிதிகளும் நிதி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதியும் செயற்படுவர் என்றும், ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களின் பெயர்களை, தகைமைகளைப் பரிசீலித்து பரிந்துரைகளை பெறுவதற்காக, இக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு, ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் இது தொடர்பில் சகல அமைச்சர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்தல் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
04 Jul 2025