2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அர்ஜுனுக்கு அதிகபட்ச தண்டனை: ‘ஜனாதிபதியே தீர்மானிப்பார்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கவேண்டிய தண்டனை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிப்பார் என்று,  நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  

கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று, எதிர்வரும்

வௌ்ளிக்கிழமை (14), நிதிச் சபையில் ​நடைபெறவுள்ளது. இதன்போது, மேற்படி மோசடி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றார்.

“அதேபோன்று, பிணைமுறி மோசடி தொடர்பான உள்ளக விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த விசாரணையின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானம் மற்றும் நிதிச் சபையில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கமைய, அர்ஜுன் மகேந்திரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, “எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படும். அத்துடன், இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள “எட்கா” ஒப்பந்தத்தால், எவருக்கும் எந்தப் பிரச்சினையும் எழாது. அந்த ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் நல்லது கெட்டது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே, கைச்சாத்திடப்படும்.

குறுகிய நோக்கத்துடன் செயற்படும் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால், இந்த அரசாங்கம் கவிழப்போவதில்லை. எதிர்வரும்  2020ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தை, அரசாங்கத்தால் கூட கவிழ்க்க முடியாது போதும். அதுவரையில், சிலர் கூச்சலிட்டு வரும் வகையிலான ஆட்சி மாற்றமொன்று, ஒருபோதும் ஏற்படாது” என்றும், இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .