2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’அரகலய’வால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை துரிதப்படுத்தவும்

Simrith   / 2024 மார்ச் 27 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 மே 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் 'அரகலய' போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டு நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் நட்டஈடு அலுவலகத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் தீக்கிரையான 42 வீடுகளில் 33 வீடுகளுக்கு இதுவரை நஷ்டஈட்டு அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினால் 138 வாகனங்கள் உட்பட கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் மந்தகதியில் இடம்பெற்றதாக தெரிவித்த அமைச்சர், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .