2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவீனம் குறைந்தது

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் நிதியாண்டுக்கான, அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 1,819,005,044,000 ரூபாயை (1.819 ட்ரில்லியன்) அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.   

நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (20) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நாடாளுமன்றம், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 10.30க்குக் கூடியதையடுத்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்தைச் சமர்ப்பித்தார்.  

இந்த நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்தின் படி, 2016ஆம் ஆண்டுக்கானஅரசாங்கத்தின் மொத்தச் செலவீனமாக, 1.941 ட்ரில்லியன் ரூபாய் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான, அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம், 122.445 பில்லியன் ரூபாயினால் குறைவடைந்துள்ளது.   

அதேபோன்று, 2016ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதுகாப்புச் செலவீனம், 306.657 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான அரச பாதுகாப்புச் செலவீனம் 22.613 பில்லியன் ரூபாயால் குறைவடைந்து, 284.044 பில்லியன் ரூபாயாக உள்ளது.

இவ்வாறாக, சில அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் வருமாறு,   

விசேட செலவீனம் - ரூ. 17.578 பில்லியன்   
புத்தசாசன அமைச்சு - ரூ. 1.869  பில்லியன்
நிதியமைச்சு​ - ரூ. 242.806 பில்லியன்   
பாதுகாப்பு அமைச்சு - ரூ. 284.044 பில்லியன்   
தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - ரூ. 12.543 பில்லியன்   
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு - ரூ. 4.611 பில்லியன்  
நீதியமைச்சு - ரூ. 10.23 பில்லியன் ‌
அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு - ரூ. 12.55 பில்லியன்
சுகாதார அமைச்சு - ரூ. 160.971   பில்லியன்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு - ரூ. 9.689 பில்லியன்   
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு - ரூ. 51.299 பில்லியன்   
உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு - ரூ. 163.404 பில்லியன்    
மின்சக்தி அமைச்சு - ரூ. 1.058 பில்லியன்   
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு - ரூ. 2.698 பில்லியன்   
உள்நாட்டலுவல்கள் அமைச்சு - ரூ. 44.542 பில்லியன்   
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு - ரூ. 5.734    
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு - ரூ. 3.267 பில்லியன்   
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு -ரூ. 16.249  பில்லியன்
கல்வி அமைச்சு - ரூ. 76.943 பில்லியன்   
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு - ரூ. 165.204 பில்லியன்   
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - ரூ. 8.220 பில்லியன்   
விளையாட்டுத்துறை அமைச்சு - ரூ. 4.484 பில்லியன்    
மலைநாட்டுப் புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு - ரூ. 3.367 பில்லியன்   
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு - ரூ. 17.441 பில்லியன்    
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு - ரூ. 9.921 பில்லியன்    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .