2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

அரச நிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ஹோட்டல்

Simrith   / 2024 மே 16 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளையில் அமைந்திருந்து பின்னர் அழிக்கப்பட்ட சோல் பீச் ஹோட்டல், வெளிநாட்டில் இருந்து இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்கு சொந்தமானது என கருதப்படுவதுடன் அது அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்டுகிறது..

இந்த ஹோட்டல் சட்டவிரோத கட்டுமானம் என கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் கடலோர காவல்படை மற்றும் பொலிஸாரால் தகர்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த இடத்தில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த தனிநபர்கள் குழுவொன்று சட்டவிரோத கட்டுமானத்திற்காக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் முன்வைத்த வரிப்பத்திரம் போலியானது என கல்கிசை பிரிவு விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க நில அளவை திணைக்களத்தின் நில அளவையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய குறித்த காணி அரசாங்கத்திற்கு சொந்தமான காணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .