Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி. நிரோஷினி
அரசியலமைப்புப் பேரவையை வழிநடத்தும் குழுவின் அறிக்கை, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு (பாதீடு) முன்னர் சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றும், அரசாங்கம், நேற்று அறிவித்தது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினை நவம்பர் 10ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அதனை 26 நாட்களுக்கு தொடர்ந்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும், அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதென, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறைப் பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, நவம்பர் மாதம் 10ஆம் திகதி மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதம் ஆகியன, எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில், தொடர்ந்து 26 நாட்கள் இடம்பெற இருப்பதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை, அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது” என, அவர் மேலம் தெரிவித்தார்.
8 minute ago
24 minute ago
26 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
26 minute ago
52 minute ago