2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரசியலமைப்பு பேரவை 2 ஆவது தடவையாக கூடுகிறது

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்,  எதிர்வரும் 25 ஆம்  திகதி இடம்பெறவுள்ளது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சிலரை நியமித்தல், மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அங்கத்தவர்களை நியமித்தல் உள்ளிட்ட  விடயங்கள் தொடர்பான பரிந்துரைகளை ஆராய்வதற்காக, அரசியலமைப்பு பேரவை 25 ஆம் திகதி கூடுகிறதென, நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், குறித்த சபை 2 ஆவது தடவையாக கூடவுள்ளது.

பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை ஆராயும் வகையில், அரசியலமைப்பு பேரவை முதல் தடவையாக கூடியிருந்தது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவுப்பெற்றது. இதற்கமைய, புதிய அங்கத்தவர்கள் தெரிவு இதன்போது  இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .