Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Freelancer / 2022 மே 21 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானப்படையில் கடமையாற்றியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்த கருத்தினை இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.
கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தன்னுடைய இல்லம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், இதன்போது தாம் விமானப்படையில் கடமையாற்றிய போது சேகரிக்கப்பட்ட சில ஆவணங்கள் உள்ளிட்ட சில பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
அத்துடன் தாம் விமானப்படையில் கடமையாற்றியமைக்கான ஆதாரங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தான் விமானப்படையில் கடமையாற்றிய போது ஒரு முறை விமானிக்கான தேர்விற்கு தோற்றியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ விமானப்படையின் சாதாரண நிலை உத்தியோகத்தராக கூட கடமையாற்றியமைக்கான சான்றுகள் ஏனும் இல்லை என விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago