2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அறைக்குள் நுழைந்த கான்ஸ்டபிளுக்கு எதிராக விசாரணை

Kanagaraj   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் பொலிஸ் தங்கியிருந்த வீட்டுக்குள் களவாக நுழைந்ததாக கூறப்படும் அம்பாறை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பெண் பொலிஸார் மட்டுமே தங்கியிருக்கும் அந்த வீட்டுக்குள், மிகவும் இரகசியமான முறையில் கான்ஸ்டபிள் நுழைந்துள்ளார். அதனை கண்ட, பெண்பொலிஸ், கூக்குரல் இட்டதையடுத்து அவர், அங்கிருந்துதப்பியோடியுள்ளார்.

இதுதொடர்பில், அப்பெண் பொலிஸ், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டதையடுத்தே, இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X