2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அறுவரின் பெயர்களை நீக்கிவிட்டார் மைத்திரி

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியினால், 35 பெயர்கள் அடங்கிய பெயர் பட்டியல், ஜனாதிபதியிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சமரச பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

எனினும், அந்த பட்டியலிலிருந்து, அறுவரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கிவிட்டார்.

அதில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான பாலித்த ரங்கே பண்டார ஆகியோரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கவிட்டார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணிக்கு தாவிய, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் பெயர்களையும் நீக்கிவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .