Shanmugan Murugavel / 2021 மே 10 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு, பொருத்தமான அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனையளித்துள்ளார்.
இம்மாதம் 30ஆம் திகதி வரையில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பல்வேறுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதையடுத்து, இலங்கையில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய சில முடிவுகளுக்கு வந்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க, அனைத்து பொது நிகழ்வுகளையும் இரத்துச் செய்ய, கடைகளினுள் நுழையும் மற்றும் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த, தொற்று வீதம் அதிகமாகவுள்ள பகுதிகளை தனிமைப்படுத்த குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பொது மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க பொருத்தமான நடைமுறைகள் பேணப்பட வேண்டுமெனவும், இவற்றை நடைமுறைப்படுத்தும்போது அத்தியாவசிய சேவைகள் இடம்பெறுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago