2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அஸ்கிரிய மஹாநாயக்கர் நியமனம்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்கிரிய மஹா நாயக்கர் தேரராக பதுளை முதியங்கன ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அஸ்கிரிய மஹாநாயக்கரை நியமிப்பது தொடர்பான மஹா சங்கத்தினரின் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. இதன்போதே, புதிய மஹா நாயக்கர் தெரிவு செய்யப்பட்டார். தேர்தலொன்று நடத்தப்படாமலேயே இந்த தெரிவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதி வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி மஹாநாயக்க தேரர், காலமானதைத் தொடந்து நிலவிய, அஸ்கிரிய மஹாநாயக்கர் பதவி வெற்றிடமாகவே காணப்பட்டது. இந்நிலையிலேயே, வரக்காகொட ஞானரத்தன தேரர், அஸ்கிரிய மஹா நாயக்கராக இன்று தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X