2025 மே 17, சனிக்கிழமை

அஸ்பெஸ்டெஸ் கூரைத்தகடுகளுக்குத் தடை

George   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக விளங்கும் அஸ்பெஸ்டெஸ் கூரைத்தகடுகள் பாவிப்பதற்கு தடைவிதிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம் சிறப்பானது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு குறித்த அஸ்பெஸ்டெஸ் கூரைத்தகடுகள் முக்கிய காரணமாக விளங்குவதுடன் அதனை உணர்ந்து கொள்வதற்கு நீண்ட காலம் செல்லும் என்பதால் பொதுமக்கள் அது தொடர்பில் தெளிவான முறையில் அறிந்திருக்கவில்லை என ரஜரட்ட பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போன்ற நாடுகளில் பொதுமக்கள் வீடுகளை அமைப்பதற்கு அஸ்பெஸ்டெஸ் கூரைத்தகடுகளை அதிகளவில் பாவிப்பதாகவும் அதன் காரணமாக புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதாகவும் தெரியவந்ததையடுத்து அது தொடர்பில் குறித்த நிறுவனத்துக்கு அறிவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அஸ்பெஸ்டெஸ் கூரைத்தகடுகளை தடைசெய்ய நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு தேவையான உதவிகள் தனக்கு கிடைக்வில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அத்துடன் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

29ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தனது தீர்மானத்தை அறிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .