2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆசிரியர் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வான் சாரதி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 8 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில், கடந்த மாதம் 18ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த வேன் சாரதி மீது 
தாக்குதல் நடத்தப்பட்டது.

முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த தாக்குதலை நடத்திய நிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனையடுத்து, பிரதான சந்தேக நபரான கணித ஆசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு அத்தனகல நீதவான் தரங்க ராஜபக்ஷ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேக நபர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பாதிக்கப்பட்டவருக்கு எந்த விதத்திலும் மிரட்டல் விடுக்க கூடாது என, சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கினை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X