Janu / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் உள்ள இசட்.டி. பிரதான கால்வாயில் விழுந்து எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த எம்.பி. லஷ்மிக ஹேஷான் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது தாயுடன் ஆடுகளைப் பார்க்கச் சென்றிருந்த நிலையில் மகன் திடீரென காணாமல் போனதை அடுத்து அவர் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என சந்தேகித்து தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வீட்டிலும் தனது மகன் இல்லாததால் அயலவர்களுடன் இணைந்து இசட்.டி. கால்வாய் பகுதியில் மகனை தேடியுள்ளார்.
இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் குறித்த கால்வாய்க்குள் இருந்து சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
23 minute ago
31 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
31 minute ago
48 minute ago