2025 மே 19, திங்கட்கிழமை

ஆட்காட்டி வெளி மாவீரர் இல்லத்தில் அச்சுறுத்தல்

Freelancer   / 2022 நவம்பர் 06 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.லம்பேட்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்று (06) காலை சிரமதான பணிகள் இடம்பெற்ற போது, அங்கு சென்ற அடம்பன் பொலிஸார், சிரமதானம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, மாவீரர் தின நினைவேந்தல்களை மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் இடம் பெறவுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம் செய்யப்பட்டு, மாவீரர்களின் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதி நாளான எதிர்வரும் 27ஆம் திகதி மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால், இன்று (06) காலை சிரமதான பணிகள் இடம் பெற்றன.

அந்த சிரமதான நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில், சிரமதானம் முடியும் சந்தர்ப்பத்தில் துயிலும் இல்ல பகுதிக்கு வந்த அடம்பன் பொலிஸார் சிரமதானம்  மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் அங்கிருந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X