Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 28 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிப் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு, தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை சூழ்ச்சி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அமைச்சர் சர்த் பொன்சேகாவின் பெயர் அடிப்பட்டதாகவும், பின்னர் அரசியல் தலையீடுகளால் பொன்சோகவின் பெயர் மூடி மறைக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த படுகொலை சூழ்ச்சிகளுக்குப் பின்னால், மேலும் பல முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் உள்ளதாகவும், இவர்கள் யார் என்று தெரிய வரும்போது மக்கள் அதிர்ச்சியடைவார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினருடனான நேற்றைய(28) சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டகளஸ் தேவானந்தா, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025