J.A. George / 2021 ஏப்ரல் 16 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மருதானை பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவரை இரும்புக் கம்பி மற்றும் வாள்கள் கொண்ட குழுவினர் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருதானை பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்டோவை பின்னோக்கி செலுத்தப்பட்டபோது, நபரொருவர் மீது மோதிய நிலையில், மோதப்பட்ட நபருக்கும் சாரதிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் குறித்த ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த வேளையில் வாள்களுடன் அவ்விடத்துக்குவந்த குழுவொன்று சாரதியை சரமாரியாக தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர்கள் சாரதியை மட்டுமல்லாது ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தி அதனை புரட்டிப்போடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த 22 வயதான ஆட்டோ சாரதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago