Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையை அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளார்.
டுவுவுநு சார்பு புலம்பெயர்ந்தோரால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் ஆயுத படைகளுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்க இந்த அரசாங்கம், பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 10ஆம் திகதி ஆணைக்குழுவில் முதலாவது இடைக்கால அறிக்கை, ஜனாதிபதி தை;திரிபால சிறிசேனவிடம் வழங்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என பரணகம கூறினார்.
முதல் தடைவை, இந்த ஆணைக்குழுவுக்கு காணாமல் போனோர் பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
பின்னர் இரண்டாவது தடவையாக, யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தவை தொடர்பாக பொறுப்பு கூறும் நோக்கில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி ஆணைக்குழுவுக்கு பொறுப்பு வழங்கியிருந்தார்.
வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையில், இரு தரப்பினராலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை அல்லது யுத்த குற்றம் இழைக்கப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, இனிமேல் இவ்வாறு நடக்காது தடுப்பதற்கான பரிந்துரைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது என பரணகம கூறினார்.
இருப்பின் உள்நோக்கம் கொண்ட சில குழுக்கள், சேர் டெஸ்மண்ட் டி சில்வா மற்றும் பரணகம ஆணைக்குழுவுக்கு எதிராக ஜனாதிபதி சிறிசேனவுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025