2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் சந்தேகம் இல்லை

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் சந்தேகம் இல்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார் (வயது 25), இலண்டனில் கடந்த புதன்கிழமை (12) காலமானார்.

இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்தநிலையிலேயே காலமாகியுள்ளார்.

சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .