Editorial / 2021 ஜனவரி 10 , பி.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்டு கொண்டுள்ளது.
இதுதொடர்பில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது;
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த இறந்தவர்களை நினைவுகூரும் தூபி உடைப்பு, மற்றும் கொவிட்–19 நோய்த் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களைப் பலவந்தமாக எரியூட்டுவது போன்ற, நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி, அவமதிக்கும் அரசாங்கத்தின்
நடவடிக்கைகளைக் கண்டித்து, வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமூகம், முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago