Freelancer / 2021 ஜூலை 25 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்டா என அழைக்கப்படும் கொவிட் 19இன் இந்திய மாறுபாடு, எதிர்வரும் மாதங்களுக்குள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக இருக்கும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்தார்.
உலகின் ஏனைய நாடுகளில் பரவும் விதத்தைக் கொண்டும், பிற திரிபுகளுடன் ஒப்பிடும்போது டெல்டாவின் அதிக பரவுதலைக்கொண்டும் இத்திரிபு ஆதிக்கம் செலுத்தும் என்று முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.
இதுபோன்ற பின்னணியில், டெல்டா திரிபுக்கான வினைத்திறன் தொடர்பில் போதுமான தரவுகள் இல்லாத கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு உள்ளூர் வைத்திய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பது குழப்பமாக உள்ளது என்றும் ஏனைய நாடுகள் திரிபுக்கு எதிராகப் போராடக் கூடிய தடுப்பூசிகளைப் பயன்படு்த்துகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் 19 நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகத் தோன்றும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை மறுபரிசீலனை செய்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago