2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆப்கான் தூதரகத்தை மூடுகிறது இலங்கை

Freelancer   / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான அரசு திடீரென சரிந்ததுடன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, காபூலுக்கான இலங்கைத் தூதுவர் தனிப்பட்ட விடுமுறையில் இலங்கை திரும்பியதால், தூதரகம் செயற்படவில்லை என்று தெரியவருகிறது.

இதன்படி, காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு செய்த பரிந்துரைரைக்கு அமைய  ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தூதரகம் மூடப்பட்டவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .