2025 மே 19, திங்கட்கிழமை

ஆயுதங்களுடன் எழுவர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறான கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ஏழு போரை  கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைக்குண்டு, 6 கூர்மையான ஆயுதங்கள், 10 உலோக குழாய்கள், நான்கு குண்டாந் தடிகள், மணல் அடைக்கப்பட்ட போத்தல் ஒன்று, போலியான 600 சிகரெட்டுகள், 6 போலி அடையாள அட்டைகள்,  கஞ்சா கலக்கப்பட்ட பாபுல் வகையைச் சேர்ந்த சிறிய ரக பெக்கட்டுகள் 47, இரண்டு கடவுச்சீட்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதவாச்சி இத்திரிகொல்லாவ ஹோட்டலில் 80ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தல் மற்றும் ஒருவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்தல், காசோலை மோசடிகள், மற்றுமொருவரின் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள், அந்த ஹோட்டலில் மறைந்திருந்த போதே கைதுசெய்யப்பட்டனர் என்றும், மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் மேற்குறிப்பிட்ட ஹோட்டபில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X