Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 24 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட, வடக்கிலேயே போதைப்பொருளின் பாவனை அதிகரித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. போதைப்பொருள் என்பது, ஆயுதங்களை விட மிக மிகக் கொடியதாகும். எமதனைவரது வாழ்க்கையும், இந்தப் போதைப்பொருள் அழித்துவிடும். அதனால், போதைப்பொருள் பாவனையை கைவிடுங்கள் என உங்கள் அனை-வரிடமும் கேட்டுக்கொள்கிறேன்' என்று, வடக்கிலுள்ள இளைஞர் யுவதிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரினார்.
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், புதுக்குடியிருப்பில் நிர்மாணிக்கப்பட்ட ஹைட்ராமணி ஆடைத்தொழிற்சாலையின் திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அனைவர் மத்தியிலும் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,
'இன்று நாம், ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எந்தவொரு நபரும் சுதந்திரமாக பேசக்கூடிய நிலைமை இன்று உள்ளது. அனைவரும் சுதந்திரமாக எழுத முடியும். சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ள முடியும். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த, முப்படையினரும் பொலிஸாரும் பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தனர். பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்புக்களை மறந்துவிட முடியாது
யுத்தம் நிலவிய காலப்பகுதியின் போது, இப்பிரதேசத்தில் பாரிய பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. யுத்தம் தொடர்பான கசப்பான அநுபவங்கள் உங்களிடத்திலும் உள்ளன. கொடுமையான வடுக்களும் உள்ளன. உங்களிடத்தில் மாத்திரமல்லாது, இந்த நாட்டில் வாழும் அனைவரிடத்திலும் யுத்தத்தின் மோச மான அனுபவங்கள் உள்ளன. யுத்தம் என்பது எவருக்கும் உகந்தது அல்ல.
கடந்த மாதம் நான், பாப்பரசரைச் சந்தித்தேன். உலக நாடுகளில் நிலவும் யுத்தங்கள் தொடர்பான உங்களது கருத்து என்ன என்று அவர் என்னிடம் வினவினார். யுத்தம் என்பது பெருந்துன்பமாகும். அது மக்களுக்கு தேவையற்றதொன்று என பதிலளித்தேன். அதற்கு அவர் என்னிடம், 'இவ்வுலகில் உள்ள யுத்தத்ததை எவ்வாறு தீர்ப்பது?' என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு நான் பதிலளித்துக்கொண்டிருக்கும் போது, என்னைப் பார்த்து அவர் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார். பின்னர் அவர், 'யுத்தமொன்று நிலவும் போது, யுத்தத்தை நடத்துபவர்கள் குற்றவாளிகள் அல்லர். உலகில், யுத்தத்தை நடத்தும் அனைத்துத் தரப்பினரிடத்திலும் ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியுமா?. ஆனால், ஆயுதங்களைப் பாவிக்கும் எவரும் அந்த ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை. ஆயுதத்தை கையில் எடுத்து இன்னொருவருடைய உயிரைப் பறிக்கும் எவருக்கும் அதே விதி உரித்தாகிவிடும் அல்லவா' என பாப்பரசர் என்னிடம் வினவினார்.
ஆயுதங்களைக் கையில் எடுப்பவர்கள் குற்றவாளிகள் அல்லர். அவற்றைத் தயாரிப்பவர்களே குற்றவாளிகள் என்பதை பாப்பரசர் அப்போது எனக்கு தெளிவுபடுத்தினார். அத்துடன், இந்த உலகில் ஆயுதங்களைத் தயாரிப்பவர்கள் யார்? என்றும் பாப்பரசர் என்னிடம் வினவினார். உண்மையைச் சொல்லப்போனால், ஆயுதங்கள், துப்பாக்கிகள், ரவைகள் என்பன மனித குலத்துக்கு உரித்தானவை அல்ல. அனைத்து மனிதர்களும், மதக் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் வாழ்வது மிகவும் முக்கியம். மத நம்பிக்கையின் பேராலேயே நேர்த்தியான சமுதாயமொன்றை உருவாக்க முடியும். அதன்மூலமே நல்ல மனிதப் பண்புகளை விருத்தி செய்ய முடியும்.
காணாமல் போயுள்ள இளைஞர், யுவதிகளை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று பலரும் என்னிடம் கோரினார்கள். வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு முக்கியமான ஒரு விடயத்தினை நான் கூற வேண்டும். நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கிலேயே போதைப்பொருளின் பாவனை அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருள் என்பது, ஆயுதங்களை விட மிக மிகக் கொடியதாகும். எமதனைவரது வாழ்க்கையும் இந்த போதைப்பொருளால் அழிந்துவிடும். அதனால், போதைப்பொருள் பாவனையை கைவிடுங்கள் என உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். பிரச்சினைகளுக்கு முடிவு, போதைப்பொருள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்' என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago