2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆராதனைகளுக்காக திறக்கப்படும் ​கொச்சிக்கடை தேவாலயம்

Editorial   / 2019 மே 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான, ​கொழும்பு- கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயமானது, ஆராதனைகளுக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்படுவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணிவரை ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில், திருப்பலி பூஜைகள் இடம்பெறாது என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

எனவே தேவாலயத்துக்கு வருகைத் தருபவர்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .