2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆஸ்திரேலிய ஆளுநர், குழுவுடன் வந்தடைந்தார்

Editorial   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் ட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (06) பிற்பகல் வந்தடைந்தார். அவருடன் அவரது தூதுக்குழுவில் 12 பேர் கலந்து கொண்டனர். ​அக்குழுவினர் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

 ராயல் ஆஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான ASY-319 என்ற சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மதியம் 01.54 மணிக்கு வந்தடைந்தனர்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர்   விஜித ஹேரத், அவர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர்கள் ஓய்வறையில் இருந்தார்.

ஆஸ்திரேலிய ஆளுநர் மற்றும் அவரது குழுவினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்,

மேலும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டின் பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைக் கண்காணிக்கும் சுற்றுப்பயணத்திலும் ஈடுபட உள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X