2025 ஜூலை 12, சனிக்கிழமை

இ.தொ.காவுக்கு வழங்கிய பஸ்கள் தொடர்பில் விசாரணை?

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்துக்கு இந்தியா வழங்கிய 40 பஸ்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணைகளும் விரைவில் ஆரம்பமாகும் சாத்தியம் உள்ளதாக,  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, ஆறுமுகன் தொண்டமான் தர மதிப்பீடு செய்ய உத்தரவிட்டு இருப்பது அமைச்சர் திகாம்பரத்தின் வீடமைப்பு பணிகளை அல்ல.

மலையக இந்திய வீடமைப்பு திட்டத்தினை நேரடியாகவே இந்திய உயர்ஸ்தாணிகரகம் முகவர் நிறுவனங்கள் ஊடாக மேற்கொண்டுவருகிறது.  எனவே அதன் தரம் பற்றிய பரிசீலனை என்பது இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் பணிகள் மீதான பரிசோதனையும் மேற்பார்வையுமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இந்திய அரசாங்கத்தில், மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட 40 பஸ்கள் பற்றிய விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் இ.தொ.காவுக்கு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வீட்டுத் திட்டத்தின் தரம் பற்றிய பரிசோதனைகளை நடாத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விடுத்திருக்கும் உத்தரவுத் தொடர்பில் வினவியப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இந்திய வீடமைப்புத் திட்டத்தை திகாம்பரம் வகித்த அமைச்சின் ஊடாக நேரடியாக முன்னெடுக்கவில்லை. அவர் வீட்டுக்கு உரிய காணியை பெற்றுக் கொடுப்பதையும் உட்கட்டமைப்பு பணிகளுக்கு நிதி உதவி வழங்குவதையுமே மேற்கொண்டிருந்தார்.

பயனாளிகளே வீட்டைக் கட்டும் முறைமையின் கீழ் வீட்டு பயனாளிகளே தமது வீட்டைக் கட்டிக் கொள்வார்கள். இதுதான் இந்திய வீட்டுத்திட்டத்தின் அடிப்படை. இதற்காக இந்திய உயர்ஸ்தாணிகரகத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செஞ்சிலுவை சங்கம்,UN habitat, Habitat for Humanity, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை போன்ற முகவர் நிறுவனங்களே ஆலோசனை மற்றும் அடிப்படை தேவைகளைப் பெற்றுக்கொடுத்து வருகின்றன.

எனவே புதிதாக பதவி பிரமாணம் பெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தர மதிப்பீடு செய்ய சொன்னது நேரடியாகவே இந்திய உயர்ஸ்தாணிகரகம் மீதான பரிசோதனையும் மேற்பார்வையாகும்.

இ.தொ.கா காலத்தில் ஊவாவுக்கும் மத்திய மாகாணத்திற்கு என ஒப்பந்தம் செய்யப்பட்டு நுவரலியா, பதுளை மாவட்டத்திற்கு மட்டும் என அரசியல் நோக்கத்துக்காக மட்டுப்படுத்தியிருந்த திட்டத்தை மலையக மாவட்டங்கள் முழுவதும்  விஸ்தரித்த பெருமை திகாம்பரத்தை சாரும்.

அதனால்தான் இதுவரை காலம் வீடமைப்பு பெறாத மொனராகலை மக்களும் இந்திய வீட்னுத்திட்டத்தைப் பெற்றனர்.  இனி வருபவர் எவர் அமைச்சரானாலும் மாத்தறை முதல் மாத்தளை வரை குருநாகல் முதல் மொனராகலை வரை மத்திய மலை நாடெங்கும் லயத்தில் வாழும் மலையக உறவுகள் இந்திய வீடமைப்பு உதவியைப் பெறுவதை நிறுத்த முடியாது.

திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது இந்தியாவுடன் செய்த ஒப்பந்தமே செல்லுபடியானது. ஆனாலும், இந்த விசாரணைகளின் மறுபுறத்தில் இந்திய அரசாங்கத்தல் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட 40 பஸ்கள் பற்றிய விசாரணையை எதிர் கொள்வதில் இருந்து எவரும் தப்பிவிட முடியாது என்றும் தெரிவித்து உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .