2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள்

Amirthapriya   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடி, மின்னல் தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் செயற்படும் வகையில், உயிர் சேதங்களை தவிர்த்து கொள்ளும் விதமாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் சில செயற்பாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இடி, மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமிடத்து வெளியில் செல்வதையோ, வாகனங்களில் பயணிப்பதையோ தவிர்த்துகொள்ள வேண்டுமென்பதோடு, பொது வெளிகள் மற்றும் திறந்த மைதானங்களில் நிற்றலை முற்றாகத் தவிர்த்துகொண்டு, தங்களுக்கும் நிலத்துக்குமிடையேயான தொடுகை பரப்பையும் உயரத்தையும் குறைத்து கொள்ளும் வகையில் இரு கைகளாலும் இரு காதுகளையும் பொத்தி, கால் பெருவிரல்களை ஒன்று சேர்த்து அமர்வதன் மூலம் இந்த தாக்கத்திலிருந்து மீள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வயல்​வெளிகளில் நிற்பவர்கள் தங்கள் கைகளில் கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை இடி, மின்னல் தாக்கத்தின் போது  வைத்திருப்பதை முற்றாக தவிர்க்குமாறும், வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களில் மின்சுற்றுக்கள் குறித்து மிகவும் கவனமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி க. சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .