2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 20 கைபேசிகள், 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X