2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இந்தியா கோவிலில் தீ: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102ஆக அதிகரிப்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதிக்கு அருகே உள்ள கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 350 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில், குறித்த பிரதேசத்திலுள்ள பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்காக பட்டாசுப்பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ள கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X