2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 51 பேர் உண்ணாவிரதம்

Gavitha   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களை விடுதலைச் செய்யுமாறு வலியுறுத்தி, இந்திய மீனவர்கள் 51 பேர், நேற்று வியாழக்கிழமை (24) யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்தனர் என இந்திய துணைத்தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலப்பகுதியில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றங்களினால் குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது பண்டிகைக்காலங்கள் வருகின்ற காரணத்தினால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கோரிய போதிலும் உண்ணாவிரதத்தினை நிறுத்துவதற்கான தீர்மானத்தினை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X