2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் போராட்டம்

George   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

'இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகளை ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் விடுவிக்கவில்லை.

இதுதொடர்பாக மீனவர்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்' என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக, இராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரம் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .