Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா பாம்பன் கடலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவை கடத்துவதற்கு முயற்சி செய்த இலங்கை பிரஜையை, இந்திய கியூ பிரிவு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், படகு மூலம் குறித்த தொகை கஞ்சாவை கடத்தவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் 17ஆம் 3 மாத சுற்றுலா விசா மூலம் மதுரை விமானநிலையத்தைச் சென்றடைந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர், இலங்கையிலிருந்து பாம்பன் கடற்கரைக்குச் செல்லும் படகில், குறித்த கஞ்சாவை ஒப்படைத்துவிட்டு, அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்கு தயாராக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பாம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
53 minute ago
1 hours ago