Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பலவீனமுற்றிருந்த இந்து - லங்கா தொடர்பு, மீண்டும் பலமடைந்துள்ளதாகவும் இரு நாடுகளின் அரசியல் தலைமைகளுக்கிடையிலான தொடர்பு, மிகவும் சிறந்த முறையில் முன்நோக்கி கொண்டுசெல்லப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ள பிரதமர், அங்கு இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கேள்வி: ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்தியா பின்தள்ளப்பட்டிருந்தது. அந்த நிலைமை தற்போது மாற்றமடைந்துள்ளதா? முழுமையாகவே மாற்றமடைந்துள்ளதா?
பதில்: இந்த உலகில் உள்ள அனைத்து நாடுகளும், இலங்கையின் நண்பர்களே. எல்லா நாடுகளுடனும் இலங்கை நல்லுறவைப் பேணி வருகின்றது. இந்த நிலைமையை தொடர்ந்தும் கொண்டு செல்வோம். சீனா என்பது இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டு நாடாகும். இருப்பினும், இந்தியாவை தோற்கடித்தே அந்த நிலைமையை தோற்றுவிக்கவில்லை. அனைத்து நாடுகளுடன் நாம் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம். மேற்குலக நாடுகளுடன் சக்திவாய்ந்த நல்லுறவு உள்ளது.
இந்து - லங்கா உறவில், கடந்த காலங்களில் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது. அக்காலத்தில், இரு தரப்பும் எவ்வாறு செயற்பட்டது என்பதை என்னால் கூற முடியாது. காரணம், நாட் அக்காலப்பகுதியில் அந்த அரசாங்கத்தில் இருக்கவில்லை. தற்போதைய இந்திய அரசாங்கமும் அப்போது இருக்கவில்லை. தற்போதைய இலங்கை - இந்திய அரசாங்கங்கள், எப்படியேனும் முன்னேறவே முயற்சித்து வருகின்றன.
கேள்வி: இரு நாடுகளுக்கிடையிலான உறவு விருத்தி செய்யப்படுகிறது என்றா கூறுகிறீர்கள்?
பதில்: ஆம், உண்மையில் விருத்தியடைந்துள்ளது. இரு நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கிடையிலான உறவு விருத்தியடைந்தள்ளது. அதிகாரிகள் மட்டத்திலும் தற்போது நல்லுறவு உள்ளது. அரசியல் தலைமைகளுக்கிடையிலான உறவு மேம்படும் போது, அதிகாரிகளுக்கிடையிலான உறவும் மேம்படும். அதுவே இடம்பெறவும் வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .