Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக நேபாள நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யாத காரணத்தால், அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 05 சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேபாள பொலிஸ் ஒருங்கிணைந்த சர்வதேச காவல் நிறுவனம் (INTERPOL) நடத்திய சிறப்பு நடவடிக்கைக்குப் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பொலிஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் மலேசியா மற்றும் துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக நேபாள அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சந்தேகநபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யாததால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்த குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தின்படி அபராதம் செலுத்திய பின்னர், அவர்கள் பொலிஸ் மேற்பார்வையின் கீழ், இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் தொடர்பில், இதுபோன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று சர்வதேச பொலிஸ் நிறுவனம் (INTERPOL) அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த விரைவான நாடுகடத்தலுக்கு நேபாள பொலிஸ் துறைக்கும், இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்றும் அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. R
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago