2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

இந்தோனேசிய அதிகாரிகளுக்கு பாராட்டு

Editorial   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி.கபில

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உதவிய இந்தோனேசிய பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள், அவர்களை சனிக்கிழமை (30) அன்று இரவு அழைத்து வந்த அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்,

பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர்ல் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உட்லர், பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள்   மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர்கள் ஓய்வறையில் இந்தப் பாராட்டு வியாழ நடத்தப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X