Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற ஆசியக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை(14) அன்று நடைபெற்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்த போட்டியில் இந்தியா வென்றது.
ஆசிய கிண்ண தொடரில் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தியா, பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
எந்தவொரு விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளவேண்டும். வெற்றியால் தலைக்கணம் வரக்கூடாது. தோல்வியால் துவண்டுவிழுந்துவிடக்கூடாது. அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை பாடசாலை காலங்களில் இருந்தே ஆசிரியர்கள் கற்றுத்தந்துள்ளனர்.
எனினும், இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலாள போட்டியின் போது, இந்திய அணியினரும், பாகிஸ்தான் அணித்தலைவரும் நடந்துகொண்ட விதம், ‘விளையாட்டு அறம்’ என்பதை சரியான முறையில் புரிந்துகொண்டவர்களை முகம் சுளிக்கச் செய்து விட்டது.
இந்த போட்டியில், நாணய சூழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. ஒவ்வொரு போட்டிக்கான நாணய சூழற்சியின் போது, இரு அணிகளின் தலைவர்களும் மைதானத்தில் இருப்பர். நாணய சூழற்சியின் பின்னர் கை குலுக்கிக் கொள்வர். எனினும், ஞாயிற்றுக்கிழமை (14) அன்று நடந்த போட்டியில் கை குலுக்கிக் கொள்ளவில்லை.
அதேபோல, இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கொண்டதன் பின்னர், பாகிஸ்தான் அணியினர் கை குலுக்க காத்திருந்த போதிலும், இந்திய அணியினர் கை குலுக்காமல் சென்று விட்டனர். அத்துடன், பரிசளிப்பின் போது, பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா பங்கேற்கவில்லை.
“இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததன் விளைவு என்று நான் நினைக்கிறேன்” என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல் காரணமாகவே பாகிஸ்தான் அணியினருடன் இந்திய அணியினர், கை குலுக்கிக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.
‘விளையாட்டு அறம்’ என்பது கலாசாரத்தையும் உள்ளடக்கியது.சில சமயங்களில், அதிகப்படியான ஆசை, கோபம் அல்லது மற்றவர்களை மதிக்காமல் நடந்து கொள்ளும் மனப்பான்மை போன்ற தீய குணங்களும் ‘விளையாட்டு அறம்’ இல்லாததற்கான காரணங்களாக அமைகின்றன. இது விளையாட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் தீங்கு விளைவிக்கும்.
இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி, “இன்றைய போட்டியில் (அதாவது ஞாயிற்றுக்கிழமை) விளையாட்டு அறம் இல்லாமல் போனது மிகவும் ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது.
இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கண்ணியத்துடன் கொண்டாடப்படும் என்று நம்புவோம்”
என பதிவிட்டுள்ளார்.
22 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
28 minute ago