2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு புறப்பட்டார் ரணில்

Editorial   / 2025 நவம்பர் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க   கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வெள்ளிக்கிழமை (21) புறப்பட்டு சென்றதை விமான நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.

அவருடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவும் அவருடன் செல்கிறார்.

அவர்கள் இருவரும், வெள்ளிக்கிழமை (21)  அன்று காலை 08.40 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-121 இல் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டனர்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானின் திருமண வைபவத்தில் பங்கேற்பதற்காக அவ்விருவரும் சென்னைக்குச் சென்றுள்ளனர்.

ஜீவன் தொண்டமானின் திருமண வைபவம், 23ஆம் திகதியன்று நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X