Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள அரசுமுறை விஜயத்திற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை வியாழக்கிமை (6) அன்று சந்தித்தார்.
கடல்சார் தொடர்புகள், திறன் விருத்தி மேம்பாடு மற்றும் நவீன, முன்னேற்றம் கண்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போலவே, தெற்காசிய நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துதல் போன்றவற்றில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் எழும் சவால்களை எதிர்கொள்ள தகவல் பரிமாற்றம், பிராந்திய அபிவிருத்திக்கான முன்முயற்சிகள் மற்றும் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு இரு தரப்பினரினரும் அவதானம் செலுத்தினர்.
பிராந்திய ஸ்திரத்தன்மை, பயனுள்ள பங்கேற்பு, அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். பொருளாதார மற்றும் எரிசக்தி கூட்டாண்மை, அனர்த்த மீட்பு ஒருங்கிணைப்பு, தொடர்ச்சியான பலதரப்பு முன்முயற்சிகளை வலுப்படுத்துதல் தொடர்பாக கொழும்பில் நிரந்தரமான கருத்தாடல் செயலகமொன்றை ஸ்தாபித்தல் போன்ற, புதிய துறைகளுக்கு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு யோசனைகளை முன்மொழிந்தார்
5 minute ago
8 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
11 minute ago
14 minute ago