2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்திய - இலங்கை பாதுகாப்பு உறவு குறித்து விசேட அறிக்கை

Freelancer   / 2025 ஏப்ரல் 05 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .