2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்தியப் பிரஜைக்கு கொலை அச்சுறுத்தல்?

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குள்  வைத்து தன்னைக் கொலை செய்ய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜை தெரிவித்துள்ளார்.

இதற்காக, குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுக்கமைய தன்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறித்த சந்தேகநபர் இன்று (23) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எழுத்துமூலம் நீதிமன்றிட்கு தெரியப்படுத்துமாறு நீதவான் பிரதிவாதியிடம் தெரிவித்ததுடன், பிரதிவாதிக்கு குறித்த எழுத்து மூலம் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான பேனாவும், தாளும் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திய நாமல் குமார​வை சந்திப்பதற்காக சந்தேகநபர் அவரது வீட்டுக்கு பல தடவை சென்றமைத் தொடர்பில், நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவில் செய்த முறைபாட்டுக்கு அமையவே சந்தேகநபரான இந்தியப் பிரஜை கைதுசெய்யப்பட்டு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .